Friday, October 9, 2026

ரணிலை ஆதரவளிக்கும் நோக்கில் எம்.பி. பதவியை துறந்தார் தலதா


ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, எம்.பி. பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தாலும் தனது அரசியல் பயணம் தொடரும் என்று அவர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

"ஐக்கிய தேசியக் கட்சியைப் பிளவுபடுத்தியமை தொடர்பில் எனக்கு இன்றளவிலும் கவலை உள்ளது. நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப் பெற்றிருந்தாலும் அந்தக் குற்றம் மனதை வதைத்துக்கொண்டிருக்கின்றது.” – என்றும் தலதா குறிப்பிட்டார்.


you may also like