- by Editor
- 2 years ago
யாழ். வருகின்றார் ஜனாதிபதி அநுர
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது யாழ். மாவட்ட செயலகத்தில் விசேட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவுள்ளார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அங்கத்தவர்களுடனான சந்திப்புகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார் எனத் தகவல்கள் கூறுகின்றன.
இதனை விடவும், தென்மராட்சியில் ஆலய நிகழ்வொன்றில் ஜனாதிபதி பங்கேற்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. எனினும், இதற்கான உறுதிப்படுத்தல்கள் இன்னமும் செய்யப்படவில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்ததன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமாரவின் முதல் யாழ். விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.