- by Editor
- 1 month ago
யாழ். பல்கலை முன்றலில் இன்று போராட்டம்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்றும் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாக இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது என்று யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசும் இதுவரை தீர்வை வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உடனடித் தீர்வை வேண்டியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும், அதேசமயம் நாளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் யாழ். பல்கலைக்கழகத்திலும் இரு தினங்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேற்கொள்ளவிருக்கின்றது.
அத்துடன் இன்று முற்பகல் 11 மணியளவில், யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுப்பது என்றும், நாளை கொழும்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திலும் கலந்துகொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.