- by Editor
- 2 years ago
யாழில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!
யாழில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!
யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவின் போதை குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மானிப்பாய் சுதுமலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும். 24 வயதுடையர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.