Saturday, October 10, 2026

யாழில் தவறான முடிவெடுத்து ஓய்வு பெற்ற ஆசிரியை உயிரிழப்பு


தவறான முடிவெடுத்து வீட்டுக் கிணற்றில் குதித்து ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அம்பலவாணர் வீதி, ஆத்தியடி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சபாரத்தினம் விஜயலட்சுமி (வயது 79) என்பவராவார்.

மேற்படி பெண் கிணற்றில் சடலமாக காணப்பட்டதை அடுத்து சம்பவம் இடத்திற்கு நேற்று செவ்வாய்க் கிழமை சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர்.   

you may also like