Thursday, October 8, 2026

யாழில் கஞ்சாவுடன் நேற்று இருவர் கைது: வாகனமும் பறிமுதல்


யாழ்ப்பாணம், தென்மராட்சி, சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று 7 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பகுதியில் இருந்து கேரள கஞ்சாவைக் கடத்தி வருகின்றனர் என்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சாவகச்சேரிப் பகுதியில் பொலிஸாருடன் இராணுவப் புலனாய்வாளர்களும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த வாகனத்தை மறித்துச் சோதனையிட்டபோதே வாகனத்தில் இருந்து 7 கிலோகிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்.

அதையடுத்து, வாகனத்தில் பயணித்த இருவரையும் கைது செய்த பொலிஸார், கைது செய்யப்பட்டவர்களையும், வாகனம் மற்றும் கஞ்சாவையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

you may also like