- by Editor
- 8 months ago
யாழில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது
-
- by Editor,
- 11 months ago
- in இலங்கை செய்திகள்
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 20 கிராம் ஐஸ் போதை பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இவர்கள் 25, 23 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் வன்முறை கும்பல்களுடன் தொடர்புடையவர் எனவும் அவரிடமிருந்து ஒரு வாழும் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை யாழ். பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.