- by Editor
- 1 month ago
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பிணையில் விடுதலை
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஆகியோரைப் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், சந்தேகநபர்கள் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.