Wednesday, October 7, 2026

மீண்டும் சறுக்கிய ரூபாய் - டொலருக்கு எதிராகத் தொடரும் கடும் அழுத்தம்


அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த மாற்று விகித அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (25) வெளியிடப்பட்ட மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 332.3416 ரூபாயாகவும், விற்பனை விலை 342.0372 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

நேற்று (24) நிலவிய மாற்று விகிதங்களுடன் ஒப்பிடுகையில், டொலரின் கொள்வனவு விலை 330.3515 ரூபாயிலிருந்து 332.3416 ரூபாயாகவும், விற்பனை விலை 340.0685 ரூபாயிலிருந்து 342.0372 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

இதன் மூலம், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாக பொருளாதார அவதானிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

you may also like