- by Editor
- 2 years ago
மின் கட்டணச் சலுகைக்கான 17,213 மில்லியன் ரூபா குறைநிரப்புப் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
-
- by Editor,
- 2 weeks ago
- in இலங்கை செய்திகள்
பொதுமக்களுக்கு மின் கட்டணச் சலுகைகளை வழங்குவதற்காக 17,213 மில்லியன் ரூபாய் நிதிச் சலுகையை வழங்குவதற்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (23) பாராளுமன்றத்தில் எவ்வித திருத்தங்களுமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
நிதியொதுக்கீடு குறித்த விவரங்கள்:
2026 ஆம் ஆண்டிற்காக நிரல் அமைச்சுக்களுக்கு (Line Ministries) ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆண்டின் இறுதி வரை பயன்படுத்தப்பட மாட்டாது என அடையாளம் காணப்பட்டுள்ள நிதியொதுக்கீடுகள் மூலமே இத்தொகை திரட்டப்பட்டுள்ளது.
இந்த நிதி மறுஒதுக்கீடானது, 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் மொத்தச் செலவின எல்லைக்கோ அல்லது அதிகபட்சக் கடன் பெறும் எல்லைக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (22) அரசாங்க நிதியியல் பற்றிய குழுவில் (COPF) விவாதிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே, இப்பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.