Tuesday, October 6, 2026

மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு


பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நிலுவைத் தொகையுடனான இந்தக் கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கைகள் இம்மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

you may also like