Tuesday, October 13, 2026

மாங்குளம் துவரங்குள விவசாயிகள் 53 பேர் மீது வனவளப் பிரிவு தொடுத்த வழக்குகள் தள்ளுபடி - நீதிமன்றம் முடிவு


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்குப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட துவரங்குளம் பகுதியில் விவசாயத்தில் ஈடுபடுவதற்காக தமது காணிகளைத் துப்புரவு செய்த 53 குடியிருப்பாளர்களை கைது செய்து, அவர்களுக்கு எதிராக வனவளத் திணைக்களத்தினர் தாக்கல் செய்திருந்த வழக்கு நேற்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் ஒரு மணி நேர சட்ட சமர்ப்பணத்தின் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.

53 குடியிருப்பாளர்களையும் விடுதலை செய்த நீதிமன்றம், அதன் மூலம் அவர்கள் தத்தமது நிலங்களில் தடையின்றி விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இடம் அளித்தது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் மாங்குளம் சுற்று அமர்வு நேற்றுப் பிற்பகல் நடைபெற்றபோது அங்கு இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் சார்பில் சுமந்திரன் அங்கு நீண்ட சட்ட வாதத்தைச் சமர்ப்பணம் செய்தார்.

நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த பெரும்பாலும் அனைத்துத் தமிழ்ச் சட்டத்தரணிகளும் இவ்வழக்கில் சுமந்திரனுடன் தாங்களும் மேற்படி குடியிருப்பாளர்கள் சார்பில் முன்னிலையாகின்றனர் எனப் பதிவு செய்தனர்.

சுமந்திரனின் சமர்ப்பணத்தைக் கவனத்தில் எடுத்த நீதிவான் பிரதீபன் வனவளத் துறையினரின் வழக்குகளைத் தள்ளுபடி செய்து 53 குடியிருப்பார்களையும் விடுதலை செய்தார்.

you may also like