- by Editor
- 10 months ago
மஹர சிறை கலவரம் திட்டமிடப்பட்டதாக சந்தேகம்
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
மஹர சிறைச்சாலையில் நேற்று (01) இடம்பெற்ற கலவரம் ஏதோ ஒரு தரப்பினரால் திட்டமிடப்பட்டதாக தாம் நம்புவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் நிர்வாக இயக்குனர் சுபாசன சுபாவிக்ரம தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையின் தற்போதைய நிலைமையை இன்று (02) பிற்பகல் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் நோக்கம் அரசாங்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக தெரிவித்த அவர், இது ஏதோ ஒரு நபர் அல்லது குழுவின் திட்டமிட்ட செயற்பாடாக இருக்கக்கூடும் எனவும் கூறினார்.
இதனிடையே, சிறைச்சாலையின் நிலைமையை ஆய்வு செய்த பின்னர் கருத்து தெரிவித்த அவர், சிறைச்சாலை கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், தற்போதைய நிலையில் கைதிகளை தங்க வைப்பதற்கு ஏற்ற சூழல் அங்கு இல்லை எனவும் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, கைதிகளை ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் சுபாசன சுபாவிக்ரம தெரிவித்துள்ளார்.