- by Editor
- 2 years ago
மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் இராஜினாமா
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் இராஜினாமா கடிதம் அனுப்பப்பட்ட போதிலும், அதற்கு இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என பேராசிரியர் சரத் அபேகோன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா என்பது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பதவி விலகல் தீர்மானம் முற்றிலும் தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும் பேராசிரியர் சரத் அபேகோன் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் சரத் அபேகோன், மத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியிருந்தார்.
இதனிடையே, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் பதவியும் தற்போது வெற்றிடமாக காணப்படுகிறது. அந்தப் பதவியை வகித்த மஞ்சுளா மடஹபொல அண்மையில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இஷான் விஜேதிலக, செயலாளர் பதவியின் கடமைகளை தற்காலிகமாக மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளார்.