Saturday, October 10, 2026

மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதலமைச்சர் விஜய் அழைப்பு


''நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்குகிறது. ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள். உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.”

- இவ்வாறு தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

''நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று (நேற்று) தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.

இணையவழியில் சுய கணக்கெடுப்பு செய்யலாம். நான் பதிவு செய்துள்ளேன். உங்கள் தகவல்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு.'' என்று தெரிவித்துள்ளார்.


you may also like