- by Editor
- 7 months ago
மகளுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் ஊர்வசி
-
- by Editor,
- 2 months ago
- in சினிமா செய்திகள்
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஊர்வசி, தற்போது குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது மகள் தேஜா லட்சுமி திரையுலகில் தனது பயணத்தை விரிவுபடுத்தியுள்ளார்.
மலையாளத்தில் சுந்தரியாயவள் ஸ்டெல்லா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான தேஜா லட்சுமி, தற்போது கன்னட திரையுலகிலும் நாயகியாக அறிமுகமாகிறார். புல்லி என்ற டார்க் காமெடி திரைப்படத்தில் நடிகர் புவன் பொன்னண்ணாவுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் சிறப்பம்சமாக, ஊர்வசியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் அவர் கதாநாயகன் புவன் பொன்னண்ணாவின் தாயாக நடிக்கிறார். இதன் மூலம் தாயும் மகளுமான ஊர்வசி மற்றும் தேஜா லட்சுமி முதல் முறையாக ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
இதுகுறித்து ஊர்வசி கூறுகையில், "என் மகள் தேஜா, இந்தப் படத்தின் மூலம் கன்னட திரையுலகில் தனது பயணத்தை தொடங்குவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. புவனும் படக்குழுவினரும் கதையைச் சொல்ல சென்னை வந்தபோது, அந்தக் கதையுடன் உடனடியாக ஒன்றிவிட்டேன். இந்தப் படத்தில் நான் நடித்திருக்கவில்லை என்றால் ஒரு சிறந்த வாய்ப்பை இழந்திருப்பேன்" என்றார்.