Friday, October 9, 2026

போர்க்குற்றவாளியான கோட்டாவை நாம் ஒருபோதும் சந்திக்கமாட்டோம்: உலகத் தமிழர் பேரவையினர் திட்டவட்டம்


"முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இடம்பெற்ற தமிழருக்கு எதிரான பல்வேறுபட்ட போர்க்குற்றங்களோடு தொடர்புபட்டவர்; சர்வதேச சட்டதிட்டங்களைத் தட்டிக்கழித்தவர். எனவே, நாம் அவரை நேரில் சந்திக்க விரும்பவில்லை."

- இவ்வாறு உலகத் தமிழர் பேரவையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியவர், அரசியல் ரீதியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியவர், சர்வதேச சட்டங்களை மதிக்காது செயற்பட்டவர், நாட்டில் ஜனாதிபதிப் பதவியில் இருக்கும்போது மக்களின் எதிர்ப்பால் தப்பியோடியவர் என்பதன் அடிப்படையில் அவரைச் சந்திப்பது பயன் இல்லைதானே.

ஆனால், நாங்கள் ஏனைய அனைத்து அரசியல் தரப்பினரையும் சந்தித்து எமது நிலைப்பாட்டை விளக்குவோம்." - என்றார்.


you may also like