- by Editor
- 2 years ago
பொது மக்களுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு முயற்சியினாலே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவிப்பு.
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
பொது மக்களுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு முயற்சியினாலே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவிப்பு.
நிதி அமைச்சில் இன்று புதன்கிழமை (04) திறைசேரி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,
ஒரு நாடு பொருளாதார வெற்றிகளை அடைவதன் மூலம் மாத்திரம் அபிவிருத்தி அடைய முடியாது என்றும், அத்துடன், சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் கலாசாரம் ஆகிய மூன்று தூண்களும் ஒரே நேரத்தில் கட்டியெழுப்பப்படல் வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
சீனா, கொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் பல காலகட்டங்களில் பொது மக்களுடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சியின் பலனாகவே பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், நம் நாட்டிலும் பொது மக்களுடன் இணைந்து கூட்டு முயற்சியின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச்செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஒரு நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்வதில் தனிநபர்கள் என்ற ரீதியில் சில பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரம் இலக்குகளை அடைய அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டம், அத்துடன் அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள், 2027 ஆம் ஆண்டுக்கான GSP+ சலுகை குறித்தும் ஜனாதிபதி நிதி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
மேலும் இந் நிகழ்வில் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.