Wednesday, October 7, 2026

பொசன் வாரம் - நாடு முழுவதும் மதுபானசாலைகள் தற்காலிகமாக மூட உத்தரவு


2026 ஆம் ஆண்டு பொசன் பூரணை போயா தினத்தையும் தேசிய பொசன் வாரத்தையும் முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் தற்காலிகமாக மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பிரேமரத்ன இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ஜூன் 29 ஆம் திகதி பொசன் போயா தினத்தை முன்னிட்டு, ஜூன் 28 ஆம் திகதி இரவு மதுபானசாலைகள் மூடப்படும் நேரத்திலிருந்து ஜூன் 30 ஆம் திகதி காலை திறக்கப்படும் நேரம் வரை நாடு முழுவதும் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அநுராதபுரத்தை மையமாகக் கொண்ட தேசிய பொசன் வார நிகழ்வுகளுக்காக ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை குறிப்பிட்ட 4 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பகுதிகளில் உள்ள மதுபானசாலைகள் ஜூன் 25 ஆம் திகதி இரவு முதல் ஜூலை 3 ஆம் திகதி காலை வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி செயல்படும் மதுபானசாலைகள் குறித்து 1913 என்ற 24 மணி நேர அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது என அதன் ஊடகப் பேச்சாளர், பிரதி ஆணையாளர் ஏ.ஏ. ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

you may also like