Saturday, October 10, 2026

புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்படுமா? அரசு வெளியிட்ட தகவல்!


புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்படுமா? அரசு வெளியிட்ட தகவல்!

கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படுமா? என்ற பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர எழுப்பிய கேள்விக்கு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது என உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன பாராளுமன்றில் தெரிவிக்கையில்,

 2029 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை எந்த மாற்றங்களும் இல்லாமல் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புலமை பரிசில் பரீட்சை எதிர்காலத்தை மதிப்பிடுவதற்கும், 2029ஆம் ஆண்டுக்கு அப்பாலும் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கும் 2028 ஆம் ஆண்டில் ஒரு குழு அரசால் நியமிக்கப்பட உள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் தேவையற்ற அழுத்தங்களை குறைப்பதற்கான திட்டத்தில் பரீட்சைத் திணைக்களம் தற்போது செயல்பட்டு வருகிறது. மேலும், புலமைப்பரிசில் பரீட்சையின் போட்டித்தன்மையால் மாணவர்கள் மீதான சுமையைக் குறைப்பதற்கும் கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


you may also like