Thursday, October 8, 2026

புதுச்சேரியில் மீண்டும் என்.டி.ஏ. ஆட்சி


புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தது. என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.

இக்கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களிலும், பா.ஜ.க 4 இடங்களிலும், அ.தி.மு.க. மற்றும் லட்சிய ஜனநாயகக் கட்சி தலா ஒரு இடங்களிலும் என 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தி.மு.க 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. த.வெ.க கூட்டணி 2 இடங்களில் வென்றுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க, ல.ஜ.க இடம் பெற்றிருந்தன.

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க இடையே ஏற்பட்ட மோதலால் இக்கூட்டணியே குழப்பத்துடன் தேர்தலை சந்தித்தது. எனினும் தி.மு.க 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க ஒரு தொகுதியில் வென்றுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12, பா.ஜ.க 4, அ.தி.மு.க 1, ல.ஜ.க 1 என 18 தொகுதிகளில் வெற்று பெற்றுள்ளன. இதன்மூலம் புதுச்சேரியில் என்டிஏ தலைவரான ரங்கசாமி மீண்டும் 5 வது முறையாக முதல்வராகிறார். 

you may also like