- by Editor
- 6 months ago
புதுக்குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று மக்களின் வாழிடங்களைச் சேதப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு நகருக்குள் அதிகாலைவேளை புகுந்த யானையால் பதற்றம் ஏற்பட்டது.
புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்களுக்குள் புகுந்து காணிகளின் வேலிகளை நாசப்படுத்தியுள்ளதுடன் அப் பகுதியில்அமைந்துள் கணேசா வித்தியாலயத்தின் மதிலையும் சேதப்படுத்தி உள்ளது.
இதனால் பாடசாலையின் ஒருபகுதி மதில் முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளது.
அண்மைக்காலமாக புதுக்குடியிருப்பு கைவேலி, வேணாவில் பகுதிகளில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துவருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.