Saturday, October 10, 2026

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!


தெற்கு பிலிப்பைன்ஸில் நேற்று 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் சேதம் ஏற்படக்கூடும் என்று உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

78 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி அச்சுறுத்தல் எதுவும் வெளியிடப்படவில்லை என அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மலைப்பாங்கான தீவின் பரந்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.  

you may also like