- by Editor
- 1 year ago
பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் முடியும் வரை புகலிடக் கோரிக்கையாளர் வெளியேற்றப்படமாட்டா
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் முடியும் வரை புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் நிறுத்திவைக்கப்படும் என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பு பிரித்தானியாவில் பல முக்கிய விடயங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிரித்தானியாவிலிருந்து எப்போது நாடு கடத்தப்படுவோமோ என்ற அச்சத்திலிருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தியாக இந்த விடயம் அமைந்துள்ளது.
விடயம் என்னவென்றால், தேர்தல் முடிவுகளில் ரிஷி சுனக் பிரதமர் பதவியை இழப்பாரானால், ருவாண்டா திட்டம் செயல்படாமலே போகவும் வாய்ப்புள்ளது.
இதற்கு காரணம், லேபர் கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், ருவாண்டா திட்டமே ரத்து செய்யப்படும் என லேபர் கட்சித் தலைவரான கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.