Saturday, October 10, 2026

பிரித்தானியாவில் அணுகுண்டு தயாரிக்க ஏதுவான பொருள்களுடன் பலர் கைது


பிரித்தானியா தலைநகர் லண்டனில் பெட்ஃபோர்ட்ஷையர் நகரில் அமைந்துள்ள ஒரு வீட்டிலிருந்து அணு குண்டை தயாரிக்கும் பொருள்களுடன் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சு அவசரமாக கூடி இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட்ஷையர் நகரிலுள்ள ஒரு வீட்டை பயங்கவாத தடுப்புப் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது வீட்டின் பின்னாலுள்ள தோட்டப் பகுதியிலிருந்து, ரேடியோ அக்டீவ் என்று அழைக்கப்படும் கதிரியக்க பொருள்கள். சிறிய ரக அணு குண்டு ஒன்றை தயாரிக்க ஏதுவான வெடி பொருள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு அந்த வீட்டில் இருந்த பலர் கைதுசெய்யபட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடைய மேலும் பலரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பிரித்தானிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

you may also like