Friday, October 9, 2026

பிரிக்ஸ் கொள்கைகளுடன் இணங்கும் நாடுகளுக்கு 10% வரி உயர்வு!


பிரிக்ஸ் கொள்கைகளுடன் இணங்கும் நாடுகளுக்கு 10% வரி உயர்வு!

"அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன்" பிரிக்ஸ் அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு நடந்த முதல் உச்சிமாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலைவர்களை பிரிக்ஸ் குழு ஒன்று சேர்த்தது. பின்னர் தென்னாப்பிரிக்காவை இந்த கூட்டமைப்பு சேர்த்தது. கடந்த ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க நிலையில், ட்ரம்ப் யின் இவ் அறிவிப்பானது இவ் நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

- இது குறித்து ட்ரம்ப் தனது பதிவில்,

"பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாட்டிற்கும் கூடுதலாக 10% வரி விதிக்கப்படும். இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!" என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


you may also like