Wednesday, October 7, 2026

பாராளுமன்ற ஒன்றியத்தின் கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் தலைவராக எம்.பி ஜகத் மனுவர்ண தெரிவு!


பாராளுமன்ற ஒன்றியத்தின் கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் தலைவராக எம்.பி ஜகத் மனுவர்ண தெரிவு!

பத்தாவது பாராளுமன்றத்துக்கான கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றியத்தின் தலைவராக அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் ருவான் மாபலகம முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா அதனை வழிமொழிந்தார். அதற்கமைய பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டத்திலேயே அவர் தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களான ருவான் மாபலகம, துஷாரி ஜயசிங்க, சுசந்த தொடாவத்த, சுகத் வசந்த டி சில்வா மற்றும் நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 22ஆம் திகதி கூடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

you may also like