- by Editor
- 1 month ago
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி
-
- by Editor,
- 1 day ago
- in விளையாட்டு செய்திகள்
லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்புத் தொடரின் ஐந்தாவது போட்டியில், இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியை, இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் 25.3 ஓவர்களில் 110 ஓட்டங்களுக்குள் சுருட்டினர். இலங்கை அணியின் சார்பில் சிறப்பாகப் பந்துவீசிய தில்ஷான் மதுஷங்க, 34 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
111 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தன்வசப்படுத்தியது.
இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய கமிந்து மெண்டிஸ், ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களைப் பெற்றார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய பவன் ரத்நாயக்க, ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
சிறப்பான பந்துவீச்சு மற்றும் அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கை அணி இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வெற்றியைப் பதிவு செய்தது.