- by Editor
- 1 year ago
பணப்பரிமாற்ற நிலையங்களை குறிவைத்து காசாவில் இஸ்ரேல் வான் வழித்தாக்குதல்
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
காசாவின் மத்திய பகுதியில் தொடர்ந்தும் இஸ்ரேல் வான் வழித்தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.
இதேவேளை, காசாவின் பணப்பரிமாற்ற நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பணப்பரிமாற்ற நிலையங்களில் இருந்து சுமார் 2.5 மில்லியன் டொலர்களை இஸ்ரேலிய படைகள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இஸ்ரேலின் தாக்குதலினால் காசாவை விட்டு அதிகமான மக்கள் வெளியேறி வருகின்றனர் என உலக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட வான்வழித்தாக்குதலில் 7 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.