- by Editor
- 5 months ago
பங்களாதேஷில் எதிர்ப்புப் போராட்டம்; தொலைபேசி, இணைய சேவை முடக்கம்
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவ குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்து மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகப் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்காகத் தொலைபேசி, இணையச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பில் 30 வீத இட ஒதுக்கீடு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை மீளப் பெறுமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் 6 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டம் காரணமாக பங்களாதேஷ் முழுவதும் உள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைக் கால வரையறையின்றி மூடுமாறு அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.