Saturday, October 10, 2026

நோர்வூட் பிரதேச செயலகம் - கைஎழுத்து இயக்கம் நாளை பொகவந்தலாவில்


நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரை அண்மித்த பகுதியில் மீள அமைக்கக் கோரி கைஎழுத்து இயக்கம் நாளை (25) பொகவந்தலாவ பகுதியில் நடைபெற உள்ளது.

மலையக அரசியல் அரங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த இயக்கத்திற்கு ஆதரவாக சிவில் சமூக அமைப்புகளும் இணைவதற்கு தீர்மானித்துள்ளன.

முன்னதாக நோர்வூட் பிரதேச செயலகம், தித்வா புயல் அனர்த்தத்திற்கு முன் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் இருந்து ஹட்டன் நகருக்கு திடீரென மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், ஹட்டன் நகரில் தனியான புதிய பிரதேச செயலகம் ஒன்றையும் அமைக்க வேண்டும் என மலையக அரசியல் அரங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, நோர்வூட் நகரை அண்மித்த பகுதியில் பிரதேச செயலகத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு வழங்கும் அனைவரும், நாளை காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை பொகவந்தலாவ நகரில் நடைபெறும் மக்கள் மனுவில் கைஎழுத்திட அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கைஎழுத்து இயக்கத்தில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்குமாறு மலையக அரசியல் அரங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

you may also like