Sunday, October 11, 2026

நெற்பயிர்ச்செய்கை துறையில் பங்களிப்பு செய்யவுள்ள சீனா!


அதிக விளைச்சலுடன் கூடிய நெற்பயிர்ச் செய்கையை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் தனது நிபுணத்துவத்தை பகிரவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்த போதே இலங்கைக்கான சீனத் தூதுவர் லீ கியாங் இதனைத் தெரிவித்தார் எனப் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகளை எதிர்வரும் சிறுபோக பருவத்தில் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயத்துறையை நவீனமயமாக்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார் எனப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

you may also like