- by Editor
- 3 months ago
நெடுந்தீவில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்! மழையால் தேடுதல் இடைநிறுத்தப்பட்டது!!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் 750 இற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன.
நெடுந்தீவு கிழக்கு, 15ஆம் வட்டாரம் பகுதியில் மக்கள் நடமாடம் இல்லாத தனியார் காணியிலேயே துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள நெடுந்தீவுப் பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றனர்.
ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து நேற்று நடத்திய தேடுதலில் ரி - 56 ரகத் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 750 இற்கும் மேற்பட்ட ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலையில் இடைநிறுத்தப்பட்டது.