Saturday, October 10, 2026

நீலாங்கரையில் 'குந்தவை' தரிசனம் - விஜய் வீட்டிற்கு விரைந்தார் நடிகை த்ரிஷா


தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்திற்கு நடிகை த்ரிஷா கிருஷ்ணன் வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி தவெக முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படும் சூழலில், இந்த வருகை அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

you may also like