- by Editor
- 4 months ago
நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை ஞானசார தேரர் - பிடியாணை கோரிய அரச தரப்பு
-
- by Editor,
- 1 week ago
- in இலங்கை செய்திகள்
ஞானசார தேரரின் சிறைத் தண்டனையை அமுல்படுத்தக் கோரி மனு – விசாரணை ஒத்திவைப்பு
ஜனாதிபதியின் மன்னிப்பு இரத்து செய்யப்பட்ட நிலையில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அமுல்படுத்துமாறு கோரி சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (29) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேல்முறையீட்டு நீதிபதிகளான மாயாதுன்ன கொரயா மற்றும் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும், ஞானசார தேரர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
அவருக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, தனது கட்சிக்காரர் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருப்பதாகவும், மனு தொடர்பான வாதங்களை ஆராய்ந்து முன்வைப்பதற்கு ஒரு நாள் கால அவகாசம் வழங்குமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது, அரச சட்டத்தரணி சஜித் பண்டார, இது குற்றவியல் தன்மை கொண்ட வழக்கு என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், பிரதிவாதி நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறும் அரச சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
எனினும், ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குறித்த மனுவை ஆராய்ந்து பதிலளிப்பதற்கு கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.