Friday, October 9, 2026

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும்: சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு


ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியினால் ருவான்வெல்லயில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைத்து அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி முறைமையை மாற்றுவதாகப் பலரும் கூறினர்.

பதவி ஆசை எனக்கில்லை. ஆகையால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நிச்சயமாக நீக்குவேன்.

நீக்கிவிட்டு, நாடாளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஜனநாயக நடைமுறையை ஏற்றுக்கொள்வேன்.

வெட்கம் இல்லாமல் சிலர் தலதாமாளிகையில் ஜனாதிபதி முறைமையை மாற்றுவதாகக் கையொப்பமிட்டுப் பதவியேற்றனர்.

இந்தநிலையில், தற்போது சீர்குலைந்துள்ள அரசியல் கலாச்சாரத்தை எல்லோரும் ஒன்றிணைந்து மாற்ற முன்வாருங்கள்."- என்றார்.  

you may also like