- by Editor
- 4 months ago
நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஹாங்காங், மெக்காவிற்குள் நுழையத் தடை
-
- by Editor,
- 4 months ago
- in உலக செய்திகள்
தைவான் பயணம் மேற்கொண்ட நான்கு நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சீனா ஒரு ஆண்டு கால பயணத் தடையை விதித்துள்ளது. இதன்படி, அவர்கள் சீனா, ஹாங்காங் மற்றும் மெக்காவிற்குள் நுழைய முடியாது.
கடந்த மே மாதம், நியூசிலாந்தின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த Laura McClure, Duncan Webb, Maureen Pugh மற்றும் David Wilson ஆகியோர் ஐந்து நாள் பயணமாக Taiwan சென்றிருந்தனர்.
அவர்கள் அந்நாட்டின் துணை அதிபரான Hsiao Bi-khim உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்புகள் தொடர்பாக, குறித்த எம்.பி.க்கள் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவும், தைவான் பிரிவினைவாத சக்திகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தப் பயணத் தடை, நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாகக் குறிவைத்து சீனா மேற்கொள்ளும் முதல் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இந்த முடிவு, சீனா–தைவான் உறவுகள் மற்றும் சீனா–நியூசிலாந்து இருதரப்பு உறவுகள் குறித்த விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
தைவானை தனது பகுதியாகக் கருதும் சீனா, அந்நாட்டுடன் அதிகாரபூர்வ அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தும் வெளிநாட்டு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது கடந்த சில ஆண்டுகளாக கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது. இந்த புதிய பயணத் தடை, அந்தக் கொள்கையின் தொடர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.