Sunday, October 4, 2026

நாமலுக்கு எதிரான மோசடி வழக்கு - செப்டெம்பர் மாதம் விசாரணை!


நாமலுக்கு எதிரான மோசடி வழக்கு - செப்டெம்பர் மாதம் விசாரணை!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான மோசடி வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 மே் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை உத்தரவிட்டுள்ளது.

றக்பி விளையாட்டை மேம்மபடுத்த கிரிஷ் நிறுவனம் கொடுத்ததாக கூறப்படும் 70 மில்லியன் ரூபா பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ் வழக்கு தொடர்பில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may also like