Friday, October 9, 2026

நான் அரசியலுக்கு வந்தது காலத்தின் கட்டாயமாகும் : விஜய பிரபாகரன் கருத்து


“ஓர் இளைஞனாக விருதுநகர் தொகுதியில் நிற்கிறேன். ஒருநாள் அரசியலுக்கு வருவேன் என்று தெரியும். ஆனால், இவ்வளவு சீக்கிரம் வருவேன் என்று தெரியாது. இது காலத்தின் கட்டாயம்.”

- இவ்வாறு விருதுநகர் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாவாடி தோப்பு பகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகர் மக்கவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசுகையில்,

“ஒரு இளைஞனாக விருதுநகர் தொகுதியில் நிற்கிறேன். ஒருநாள் அரசியலுக்கு வருவேன் என்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருவேன் என்று தெரியாது. இது காலத்தின் கட்டாயம்.

விஜயகாந்தின் சொந்த மண்ணான விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்த பந்தம் என்றுமே விட்டுப் போகாது. எம்.ஜி.ஆர், கருப்பு எம்.ஜி.ஆர். என்ற உறவு இன்றும் தொடர்கிறது.” - என்றார்.  

you may also like