Friday, October 30, 2026

நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு: இம்ரான் கான் மனு நவ, 2 இற்கு ஒத்திவைப்பு


தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் கடந்த அக்.10-ம் தேதி டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக மும்பையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க குடியுரிமை பெற்ற நடிகர் இம்ரான் கான் பங்கேற்றார்.

இதுதொடர்பாக அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்றைய தினத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளிநாட்டினர் பிராந்தியப் பதிவு அலுவலகம் கடந்த 14 ஆம் திகதி 'நோட்டீஸ்' பிறப்பித்தது.

இதை எதிர்த்து நடிகர் இம்ரான் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மகேஷ் சி. திரிபாதி மற்றும் நீதிபதி அத்வைத் சேத்னா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணை நடைபெற்றது.

இதுதொடர்பாக மத்திய அரசின் பதிலைக் கேட்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராக வசதியாக அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கு நவம்பர் 2 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


you may also like