- by Editor
- 1 year ago
நாடு திரும்பினார் நாமல் - பிணையில் விடுவிப்பு!
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
நாடு திரும்பினார் நாமல் - பிணையில் விடுவிப்பு!
கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவு சென்றிருந்த நிலையில், இன்று (29) நாட்டை வந்தடைந்தார்.
மேலும், நாமல் இன்று ஒரு மனு மூலம் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுக விற்பனைக்கு எதிரான போராட்டத்தின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக ஹம்பாந்தோட்டை தலைமை நீதவான் ஓஷத மகாராச்சி நேற்று நாமலுக்கு கைது செய்ய பிடியாணை பிறப்பித்திருந்தார்.
முன்னதாக, இச்சம்பவம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ உட்பட 08 பேர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் ஆஜராகாததால், நாமலை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தலைமை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டை தலைமை நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.