- by Editor
- 1 year ago
நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரொல் குண்டு வீச்சு
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் முதியவர் ஒருவர் தனித்திருந்த வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று நள்ளிரவில் பெட்ரொல் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் சுற்று மதில் மீது ஏறிப் பாய்ந்து வீட்டுன் முகப்புப் பகுதியல் பெட்ரொல் ஊற்றி தீ மூட்டப்பட்டுள்ளது.
இதன் போது வீட்டின் முகப்பு கதவு, மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன.
முகத்தை துணியால் மூடி கட்டியவாறு தலைக்கவசம், மழைக் கவசம் என்பனவற்றை அணிந்து மர்ம நபர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நள்ளிரவில் சம்பவம் பதிவாகிய நேரம் சுதாகரித்துக் கொண்ட முதியவர் அயலவர்களை அழைத்த போது தாக்குதல் தாரிகள் தப்பியோடியுள்ளனர்.
சம்பவ நேரம் பொலிஸாருக்கு அழைப்பெடுத்து தெரிவத்த போதும், 4 மணிக்கே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பல் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.