Sunday, October 4, 2026

நடிகர் விஜயகாந்தின் மறைவு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்


விஜயகாந்தின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நண்பர் விஜயகாந்த் ஒரு சிறந்த நடிகர், நீடித்த அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிடுகையில்,

"விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். தமிழ் சினிமாவின் ஆளுமைகளின் ஒருவரான விஜயகாந்த் தனது சிறந்த நடிப்பின் மூலம் கோடிக்கணக்கான இதயங்களை கவர்ந்துள்ளார்.

அரசியல் தலைவராக தமிழக அரசியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது நெருங்கிய நண்பராக இருந்தவர்.

கடந்த காலங்களில் அவருடனான சந்திப்புகளை நினைவுகூர்கிறேன். மிகுந்த வருத்தத்திற்குரிய இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

you may also like