Thursday, October 8, 2026

தையிட்டி விகாரைக்குள் போதைப்பொருளுடன் தென்னிலங்கை இளைஞன் கைது!


தையிட்டி விகாரைக்குள் போதைப்பொருளுடன் தென்னிலங்கை இளைஞன் கைது!

தையிட்டி விகாரைக்குள் கஞ்சா போதைப்பொருள் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் தென்னிலங்கை இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தையிட்டியில் விகாரையில் நேற்று பொசன் சிறப்பு வழிப்பாட்டிற்கு. கலந்து கொள்வதற்காக இளைஞன் ஒருவன் கடந்த திங்கட்கிழமை (09) தென்னிலங்கையில் இருந்து தையிட்டி விகாரைக்கு சென்றுள்ளார்.

இதன்போது இந்த இளைஞன் விகாரையை அண்மித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளார். அதனை அவதானித்த பலாலி பொலிஸார் இளைஞனை அழைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியமையால் இளைஞனை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது இளைஞனின் உடைமையில் இருந்து கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இளைஞன் மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may also like