- by Editor
- 2 years ago
தேவேந்திரமுனையில் வீடு மீது துப்பாக்கிச் சூடு
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
மாத்தறை மாவட்டத்தின் தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது இன்று (22) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரில் வந்த சிலர் கைத்துப்பாக்கி ஒன்றைப் பயன்படுத்தி வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதியில், தேவேந்திரமுனை பகுதியில் வசிக்கும் மீனவர் ஒருவரின் வீட்டையே இலக்காகக் கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.