Sunday, October 11, 2026

தேர்தலின் பின்னரே எந்தக் கட்சியுடன் இணைவது என்பது தொடர்பில் முடிவு - தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்கி தெரிவிப்பு


"எங்களுடைய தனித்துவத்தை இல்லாமலாக்கும் முயற்சியில் பிற கட்சிகள் செயற்பட்டமையினாலேயே இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எங்களது கட்சி (தமிழ் மக்கள் கூட்டணி) தனித்துப் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது."

- இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் எந்தக் கட்சியுடன் இணைவது என்பது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

you may also like