- by Editor
- 2 years ago
திரைக்குப் பின்னே ஒரு வலி! ஜான்வி கபூர் ஏன் மது அருந்தினார்?
-
- by Editor,
- 5 months ago
- in சினிமா செய்திகள்
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், 2018 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் ‘தடாக்’ மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் ‘ரூஹி’, ‘குட் லக் ஜெர்ரி’, ‘மிலி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த அவர், பாலிவுட்டில் தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு வெளியான ‘தேவரா’ திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவிலும் கால்பதித்தார். தற்போது ராம் சரண் நடிப்பில், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவாகும் ‘பெத்தி’ திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் தனது மதுப் பழக்கம் குறித்து ஜான்வி கபூர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில்;
“நான் மதுவுக்கு அடிமையாக இருந்தேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால், எப்போதாவது குடிக்கும் பழக்கம் இருந்தது. என் வாழ்வில் மிகவும் வேதனையான ஒரு அனுபவத்திற்குப் பிறகு அது தொடங்கியது. சில நேரங்களில் காலையில் எழும்போது ஏற்படும் தலைவலி மற்றும் ஒரு விதமான சங்கடம் என்னை பாதித்தது. மேலும், மதுப் பழக்கத்துடன் தொடர்புடைய அந்த பரிச்சயமான வாசனையை உணரும்போது, அது ஒரு நல்ல நாள் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தும்”