Sunday, October 4, 2026

திங்கள் முதல் உர மானியம்


அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை எதிர்வரும் திங்கள் கிழமை முதல் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும், வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு உர மானியத்தை அதிகரிப்பதற்குக் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியது.

இந்தநிலையில், கமநல சேவை திணைக்களம் மற்றும் பல விவசாய அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவும் அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய, ஒரு ஹெக்டயர் நிலப்பரப்புக்கு 10 ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட்ட உர மானியம், தற்போது 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது .

you may also like