- by Editor
- 1 year ago
'தற்கொலைக் குண்டுகளை உடலில் தாங்கிக்கொண்டே ரணிலுடன் இணைந்தோம்':
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
தற்கொலைக் குண்டுகளை உடலில் தாங்கிக்கொண்டே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக தானும் மனுஷவும் களத்தில் இறங்கியதாக உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"எமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் என அறிந்துக்கொண்டே இந்தப் பணியில் இறங்கினோம். எமது பதவிகளுக்கு அப்பால் நாட்டின் நலனும் நாட்டின் முன் இருந்த சவால்களுமே எமக்கு முதன்மையாக இருந்தன.
ஜனாதிபதியைப் போன்று தானும் மனுஷ நாணயக்காரவும் இன்று முதல் சுதந்திரமாகச் செயற்படுவோம் என்பதுடன், புதிய அரசியல் பயணமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம்.
தற்கொலைக் குண்டுகளை உடலில் தாங்கிக்கொண்டே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகக் களமிறங்கினோம். ஆனால், இன்று நாட்டையும் காப்பாற்றியுள்ளோம். எம்மையும் காப்பாற்றியுள்ளோம்.
ஜனாதிபதியின் வெற்றிகாகப் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.” - என்றார்.