- by Editor
- 2 years ago
தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு ஒத்திவைப்பு: சர்ச்சைகளையடுத்து அரசு அதிரடி முடிவு
-
- by Editor,
- 8 months ago
- in இலங்கை செய்திகள்
"தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பை ஒத்திவைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உரிய மீளாய்வின் பின்னர் 2027 ஆம் ஆண்டு முதல் மறுசீரமைப்பு நடவடிக்கை இடம்பெறும்."
- இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கல்வி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.
"தரம் 1 மற்றும் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு ஆரம்பமாகி இருந்தாலும் தரம் 6 ஆங்கிலப் பாடத் திட்டம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் சிலர் இதனை அரசியலுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் தவறான கருத்துக்களை விதைக்கின்றனர். இதனால் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் நம்பிக்கையீனம் ஏற்படும். நம்பிக்கையுடன்தான் இந்தப் பணியை முன்னெடுக்க வேண்டும்.
அதனால்தான் கால அவகாசம் வழங்கும் நோக்கில் தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு 2027 வரை ஒத்திவைக்கப்படுகின்றது. எனினும், தரம் 1 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும்." - என்றார்.